பைக்

அடுத்த மாதம் இந்தியா வரும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2024-06-23 08:21 GMT   |   Update On 2024-06-23 08:21 GMT
  • ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்றலாம்.
  • ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 780mm அளவில் உள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே தனது மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் பிஎம்டபிள்யூ CE 04 மாடல் ஜூலை 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி திறன் 8.9 கிலோ மெகாவாட் ஆகவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். இதன் மோட்டார் 31kW திறன் கொண்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.6 வினாடிகளில் 0-50 கி.மீட்டரும் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லும். இந்த ஸ்கூட்டரை ஸ்டான்டர்டு சார்ஜர் மூலம் 4 மணி நேரம் 20 நிமிடங்களிலும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்றலாம்.


பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன் மற்றும் பின்புறம் 15 அங்குல சக்கரங்களை கொண்டிருக்க்கிறது. இந்த ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 780mm அளவில் உள்ளது. இதன் எடை 179 கிலோ ஆகும். இந்த ஸ்கூட்டரில் ஏபிஎஸ், புளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட TFT டிஸ்ப்ளே மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பானது எதிர்காலத்திற்கு ஏற்றதாகவும், அதிக வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, C 400 GT விலையானது ரூ.11.20 லட்சம் எக்ஸ் ஷோரூமில் இந்தியாவில் விற்பனையானது. இதன்அடிப்படையில் பார்த்தால் பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News