பைக்

பைக்கில் குட்டி சர்பிரைஸ் வழங்கிய பிஎம்டபிள்யூ

Published On 2024-08-12 07:44 GMT   |   Update On 2024-08-12 07:44 GMT
  • பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிளில் புது அப்டேட் தவிர வேறு மாற்றங்கள் இல்லை.
  • இந்த பைக்கிலும் 312சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது G 310 RR மோட்டார்சைக்கிளை முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் தற்போது காஸ்மிக் பிளாக் 2, வைட் மற்றும் M ஸ்போர்ட் கிராஃபிக்ஸ் மற்றும் ரேசிங் புளூ மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. வாடிக்கையாளர்கள் இதனை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம். எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே வாங்கிட முடியும். ரேசிங் புளூ மெட்டாலிக் நிற வேரியண்ட் ரெட், வைட் மற்றும் பிளாக் அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.

 


புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக்கிலும் 312சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் பிஎம்டபிள்யூ G 310 R மற்றும் G 310 GS மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் டிவிஎஸ் அபாச்சி RR 310 மற்றும் RTR 310 மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவற்றின் டியூனிங்கில் மாற்றம் செய்யப்படுகிறது. பிஎம்டபிள்யூ மாடலில் இந்த எஞ்சின் 34 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ G 310 RR மோட்டார்சைக்கிள் கேடிஎம் RC 390, டிவிஎஸ் அபாச்சி RR 310 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News