110 கிமீ ரேன்ஜ் வழங்கும் கைனடிக் லூனா இந்தியாவில் அறிமுகம்
- குறைந்த எடை கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கி.மீ. வேகத்தில் செல்லும்.
கைனடிக் கிரீன் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லூனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய கைனடிக் லூனா விலை ரூ. 69 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய லூனா எலெக்ட்ரிக் மாடலின் தோற்றம் அதன் பழைய மாடலை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த அளவீடுகளும் மெல்லிய தோற்றத்தை வழங்கும் வகையிலும், குறைந்த எடை கொண்டிருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
லூனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டீல் ஃபிரேம் கொண்டிருக்கிறது. இதில் 1.2 கிலோவாட் மோட்டார் மற்றும் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
அம்சங்களை பொருத்தவரை கைனடிக் லூனா மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லீவர் லாக், கழற்றக்கூடிய பின்புற இருக்கை, யு.எஸ்.பி. சார்ஜிங் பாயின்ட் மற்றும் பேக் லாக் போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.
கைனடிக் லூனா மாடல்- ரெட், எல்லோ, பிளாக், புளூ மற்றும் கிரீன் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 500 ஆகும். வினியோகம் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை.