பைக்

எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-01-13 04:12 GMT   |   Update On 2023-01-13 04:12 GMT
  • எல்எம்எல் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் காட்சிப்படுத்தப்பட்டது.
  • ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

எல்எம்எல் (லொஹியா மெஷினரி லிமிடெட்) நிறுவனம் தனது ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. எல்எம்எல் ஸ்டார் மாடல் அதிநவீன டிசைன் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் 2022 வாக்கில் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எதிர்கால டிசைன், முன்புறம் ஃபுளோடிங் இன்சர்டில் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கூட்டரை முதல் முறையாக பொது மக்களுக்கு காட்சிப்படுத்தியதோடு எல்எம்எல் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்களை அறிவித்தது. அந்த வகையில், இந்த ஸ்கூட்டரில் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட், இண்டராக்டிவ் ஸ்கிரீன், போடோசென்சிடிவ் ஹெட்லைட் உள்ளது.

இவைதவிர எல்எம்எல் ஸ்டார் மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட இண்டிகேட்டர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டிஸ்க் பிரேக்குகள், டெலிஸ்கோபிக் ஃபேர்க் முன்புற சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பே எல்எம்எல் நிறுவனம் தனது ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை துவங்கி விட்டது. குறிப்பாக இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் எதையும் எல்எம்எல் இதுவரை வசூலிக்கவில்லை. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

Tags:    

Similar News