பைக்

ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 அறிமுகம் எப்போ தெரியுமா?

Published On 2024-06-29 09:37 IST   |   Update On 2024-06-29 09:37:00 IST
  • புதிய கொரில்லா விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450ஐ விட மலிவு விலையில் கிடைக்கும்.
  • பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பை போன்றே உள்ளது.

இந்தியர்களின் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல் நிறுவனத்தின் புதுமுகமான கெரில்லா மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் 17-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கொரில்லா மாடல் முதற்கட்டமாக ஸ்பெயினில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இத்தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் லால் மற்றும் சிஇஓ கோவிந்தராஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

பல பாகங்கள் ஹிமாலயனுடன் பகிரப்பட்டாலும், ராயல் என்ஃபீல்டு முதன்மையாக கெரில்லா 450 மாடலை ஆன்-ரோடு பயன்பாட்டிற்காக மாற்றியமைத்ததாகத் தெரிகிறது.

மேலும் இது ADV வெர்ஷனில் இருப்பதை போன்றில்லாமல் என்டரி லெவல் ஹார்ட்வேர் பெற வாய்ப்புள்ளது. புதிய கொரில்லா விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450ஐ விட மலிவு விலையில் கிடைக்கும்.

புதிய பைக்கில் சிங்கிள்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வட்ட வடிவத்தில் எல்இடி ஹெட்லைட், கணிசமான எரிபொருள் டேங்க் மற்றும் ஒற்றை இருக்கை போன்ற அம்சங்களை கொரில்லா கொண்டுள்ளது.

சிங்கிள்-பாட் கன்சோல், ஹிமாலயனில் கிடைக்கும் TFT டிஸ்ப்ளே போன்றே இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பை போன்றே உள்ளது. ஹிமாலயன் மாடலில் ஸ்போக் வீல்கள் மற்றும் டியூப் டயர்கள் உள்ளது. ஆனால் புதிய பைக்கில் அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், இதில் USD ஃபோர்க்கிற்குப் பதிலாக டெலஸ்கோபிக் ஃபோர்க்கைக் கொண்டுள்ளது. கெரில்லா 450 இன் எஞ்சின் டியூனிங் உறுதி செய்யப்பட உள்ளது. ஹிமாலயன் மாடலில் உள்ள 452சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 40எச்பி மற்றும் 40என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News