ரூ. 1.15 லட்சம் வரை தள்ளுபடி - ஹோண்டா கார் வாங்க சூப்பர் சான்ஸ்
- ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
- கட்டணத்தில் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் கோடை காலத்தை ஒட்டி தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இறுக்கிறது. இதில் ஹோண்டா எலிவேட், சிட்டி மற்றும் அமேஸ் மாடல் கார்களுக்கு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
இதில் ஹோண்டா சிட்டி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா அமேஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 56 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. அமேஸ் எலைட் எடிஷன் மாடலுக்கு ரூ. 96 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலிவேட் மாடலின் பேஸ் வேரியண்ட்களுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் V வேரியண்டிற்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்களும், எலிவேட் ZX மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
புதிய கார் வாங்குவோர் மட்டுமின்றி ஏற்கனவே கார் வைத்திருப்போர் ஏ.சி. சர்வீஸ் செய்யும் போது 15 சதவீதம் வரை தள்ளுபடியும், ஏ.சி. சார்ந்த சேவைகளில் லேபர் கட்டணத்தில் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.