கார்

புதிய அம்சங்கள், டூயல் டோன் நிறங்களில் அறிமுகமான மாருதி சியாஸ்

Published On 2023-02-15 08:53 GMT   |   Update On 2023-02-15 08:53 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய சியாஸ் மாடல் ESP மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் வசதிகளை கொண்டுள்ளது.
  • மாருதி சியாஸ் மாடல் மூன்று டூயல் டோன் நிறங்கள், மேனுவல், ஆட்டோமேடிக் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது சியாஸ் செடான் மாடலின் டூயல் டோன் வெர்ஷன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சியாஸ் விலை ரூ. 11 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய நிறங்கள் மட்டுமின்றி சியாஸ் மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி சுசுகி சியாஸ் மாடலை வாங்குவோர் தற்போது மூன்று டூயல் டோன் நிற ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். இவைதவிர மாருதி சியாஸ் மாடல் ஏழு மோனோடோன் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில்- பியல் மெட்டாலிக் ஒபுலண்ட் ரெட் மற்றும் பிளாக் ரூஃப், பியல் மெட்டாலிக் கிராண்டியர்கிரே மற்றும் பிளாக் ரூஃப், டிக்னிட்டி பிரவுன் மற்றும் பிளாக் ரூஃப் உள்ளிட்டவை அடங்கும்.

 

அம்சங்களை பொருத்தவரை மேம்பட்ட சியாஸ் மாடலில் ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம் (ESP) உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி சியாஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் முறையே லிட்டருக்கு 20.46 கிலோமீட்டர் மற்றும் 20.04 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. 

Tags:    

Similar News