ஆட்டோமேடிக் கார் விற்பனையில் புதிய மைல்கல்.. மாருதி சுசுகி அசத்தல்
- மாருதி சுசுகி நிறுவனம் நான்கு வகையான ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது.
- ஆட்டோமேடிக் மாடல்கள் விற்பனையில் 65 சதவீத யூனிட்கள் AGS வகையை சேர்ந்தது ஆகும்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஆட்டோமேடிக் கார் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் புதிய மைல்கல் எட்டியது. தற்போது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட 16 மாடல்களை மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இதில் நான்கு வகையான ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அடங்கும். அவை ஆட்டோ கியர் ஷிஃப்ட் (AGS), 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் e-CVT யூனிட் உள்ளிட்டவை அடங்கும். ஒட்டுமொத்தமாக ஆட்டோமேடிக் மாடல்கள் விற்பனையில் 65 சதவீத யூனிட்கள் AGS டிரான்ஸ்மிஷனை சேர்ந்தவை ஆகும்.
"வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் ஆர்வம் செலுத்தி வருகிறோம். அனைவருக்கும் மொபிலிட்டி மூலம் சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்பதை எங்களின் குறிக்கோளாக வைத்திருக்கிறோம். இதன் மூலம் எங்களது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தில் பல வகைகளை கொடுக்க முடிகிறது."
"வாடிக்கையாளர்கள் அளித்திருக்கும் அமோக வரவேற்பு காரணமாக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமேடிக் மாடல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023-24 நிதியாண்டு விற்பனையில் ஒரு லட்சம் ஆட்டோமேடிக் யூனிட்களை விரைவில் அடைந்துவிடுவோம்," என்று மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார்.