கார்

இந்தியாவில் அறிமுகமான மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2024-01-31 13:47 GMT   |   Update On 2024-01-31 13:47 GMT
  • புதிய காரில் கூடுதல் அம்சங்கள், ஸ்டைலிங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது GLA ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 50.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய காரில், அதன் முந்தைய வெர்ஷனில் வழங்கப்பட்டதை விட கூடுதல் அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் மாடல் - GLA200, GLA220d 4மேடிக், GLA 220d 4மேடிக் AMG லைன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.


 

மாற்றங்களை பொருத்தவரை GLA ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், புதிய டிசைன் கொண்ட டி.ஆர்.எல்.கள், ரிவைஸ்டு கிரில், முன்புற பம்ப்பரில் வித்தியாச வடிவம் கொண்ட ஏர் இன்டேக்குகள், புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்டீரியரில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இத்துடன் பிலைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, கீலெஸ் கோ கம்ஃபர்ட் பேக்கேஜ் மற்றும் அதிநவீன MBUX NTG7 மென்பொருள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய GLA மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 163 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 193 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் DCT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News