விரைவில் இந்தியா வரும் புதிய ஹோண்டா சிட்டி
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது.
- புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் மைனர் அப்டேட்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் மார்ச் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை விவரங்களை அறிவிக்க இருக்கிறது. புதிய மேம்பட்ட ஹோண்டா சிட்டி மாடல் புகைப்படங்கள் ஏற்கனவே அந்நிறுவன வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த காரின் வேரியண்ட் விவரங்களும் இடம்பெற்று விட்டது.
புதிய ஹோண்டா சிட்டி மாடல் SV, V, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போது இந்த கார் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் வைட் பியல், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டலிக் மற்றும் மீடிராய்டு கிரே மெட்டாலிக் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த நிற ஆப்ஷன்களுடன் புதிதாக புளூ நிற வேரியண்ட் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.
2023 ஹோண்டா சிட்டி மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுக்கு நிறுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக 1.5 லிட்டர் NA பெட்ரோல் மோ்டார் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.5 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார் உடன் ஹைப்ரிட் மோட்டார் மற்றும் e-CVT யூனிட் வழங்கப்படுகிறது.
மேம்பட்ட புதிய ஹோண்டா சிட்டி மாடலில் காஸ்மடிக் அப்டேட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள், புதிய கிரில், அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய ஹோண்டா சிட்டி மாடலில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரெயின்-சென்சிங் வைப்பர்கள், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் ரிவைஸ்டு இண்டீரியர் வழங்கப்படுகிறது.