இந்தியாவில் உற்பத்தியாகும் முதல் ஆடம்பர எலெக்ட்ரிக் கார் - வால்வோ அசத்தல்!
- வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
- இந்த மாடலின் விலை அதிகளவு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.
வால்வோ இந்தியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் XC40 ரிசார்ஜ் மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய வால்வோ எலெக்ட்ரிக் கார் பெங்களூருவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு, வினியோகம் அக்டோபர் மாதத்தில் துவங்க இருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் முதல் ஆடம்பர வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை வால்வோ நிறுவனம் பெற்று இருக்கிறது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் போது வால்வோ XC40 ரிசார்ஜ் விலையை அதிகளவு போட்டி ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்க முடியும்.
வால்வோ XC40 ரிசார்ஜ் காரில் 240 ஹெச்.பி. திறன் வழங்கும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை 408 ஹெச்.பி. பவர், அதிகபட்சம் 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும்.
வால்வோ நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் XC40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என ஐரோப்பிய WLTP டெஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.