சினிமா

விஜய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Published On 2016-06-06 18:50 IST   |   Update On 2016-06-06 18:50:00 IST
முன்பு நடித்த படக்குழுவினர் கீர்த்தி சுரேஷை நடிக்க அழைத்ததற்கு விஜய் படத்தை முடித்த பிறகு நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவர் தற்போது தனுஷுடன் நடித்துள்ள ‘தொடரி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. பிரபு சாலமன் இயக்கியுள்ள இப்படமும் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயர் பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. தற்போது விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய் படத்திற்காகவே அவசர அவசரமாக ‘ரெமோ’ படத்தில் நடித்து முடித்து விஜய் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்த தெலுங்கு படம் ஒன்றின் பேட்ஜ் ஒர்க்கில் கலந்து கொள்ளுமாறு படக்குழுவினர் அழைத்திருக்கிறார்கள். அதற்கு கீர்த்தி சுரேஷ், விஜய் படத்தை முடித்த பின்னர்தான் வரமுடியும். அதுவரை காத்திருங்கள் என்று கூறிவிட்டாராம்.

Similar News