சினிமா
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
அருண் விஜய் நடிப்பில் தடம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தில் நாயகியின் உதட்டை கடிக்கவில்லை என்று அருண்விஜய் கூறியுள்ளார். #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep
தடையற தாக்க, மீகாமன் படங்களை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தடம். அருண் விஜய் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் என நான்கு கதாநாயகிகள்.
ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் தயாரித்துள்ளார். இந்த படம் பற்றி மகிழ்திருமேனி பேசும்போது ‘தடையற தாக்க என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அந்த படத்துக்கு பின்னர் 2-வது முறையாக அருண்விஜய்யுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு இயக்குனரின் கதாநாயகன். அவர் கேரியரில் இந்த படமும் மறக்க முடியாத தடத்தை பதிக்கும். செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி என் மனதை பெரிதாக பாதித்து படமாக உருவாகி இருக்கிறது’ என்றார்.
அருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.
நான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் அவர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தார். #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep
அருண் விஜய் பேசிய வீடியோ: