சினிமா
விஜய்

பிறந்தநாள் வருது, ஆனா வயசே ஆக மாட்டேங்குது - விஜய் குறித்து பிக்பாஸ் பிரபலம் டுவிட்

Published On 2021-06-22 10:58 IST   |   Update On 2021-06-22 10:58:00 IST
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. 


நடிகை கஸ்தூரியின் டுவிட்டர் பதிவு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான கஸ்தூரி, பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு, ‘பிறந்தநாள் வருது, ஆனா வயசே ஆக மாட்டிங்குது’ எனக் குறிப்பிட்டு நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Similar News