சினிமா செய்திகள்
null

நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்- அல்லு அர்ஜூன்

Published On 2024-12-14 03:59 GMT   |   Update On 2024-12-14 04:58 GMT
  • என்மீது அன்பும், ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
  • நான் நலமாக உள்ளேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன், போலீஸ் விசாணைக்கு ஒத்துழைப்பேன்.

தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து ரிலீஸ் ஆனதும் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அல்லு அர்ஜூன் கூறியதாவது:-

என்மீது அன்பும், ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. நான் நலமாக உள்ளேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன், போலீஸ் விசாணைக்கு ஒத்துழைப்பேன். மீண்டும் ஒருமுறை மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அது துரதிருஷ்டவசமான நிகழ்வு. அது நடந்தவைக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அல்லு அர்ஜூன் தெரிவித்தார்.

முன்னதாக, புஷ்பா 2 படத்தை பார்க்க முன் அறிவிப்பின்றி தியேட்டருக்கு சென்றதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு அதில் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஐதராபாத் போலீசார் நேற்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சஞ்சல்கடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. 50 ஆயிரம் ரூபாய் பிணையுடன் 14 நாட்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இருந்த போதிலும் சிறைத்துறை அதிகாரிகள் அவரை ரிலீஸ் செய்ய மறுத்துவிட்டனர்.

இன்று காலை நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அல்லு அர்ஜூனை அவரது தந்தை அல்லு அரவிந்த் மற்றும் மாமனார் கஞ்சர்லா சந்திரசேகர் ரெட்டி ஆகியோர் சிறைவாசலில் வரவேற்றனர்.

Tags:    

Similar News