பிரபல மேக்கப் கலைஞரை அவமதித்த அமலா பால்
- அமலா பாலுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
- அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
வட இந்தியாவில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞர் மற்றும் சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஹேமா தனக்கு நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது, "ஒருமுறை சென்னையில் அமலா பாலுடன் படப்பிடிப்புக்கு சென்றேன்.
ஏப்ரல், மே மாதத்தில் கடும் வெயிலில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. நாங்கள் சென்ற இடத்தில் கொஞ்ச நேரம் நிழலில் உட்காரலாம் என்றால் கூட ஒரு செடியோ, மரமோ இல்லை.
அதனால் கேரவேனுக்குள் உட்கார்ந்து கொண்டோம். ஆனால் நான் உட்கார்ந்த உடனே அமலா பால் தனது மானேஜரை அழைத்து என்னை வேனை விட்டு வெளியேறும்படி சொல்லி அனுப்பினார்.
நானும் இன்னும் சிலரும் அங்கு உட்கார்ந்திருந்தோம். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம்.
ஆனால் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. அதனால் வேனை விட்டு இறங்கினோம். இதுபோன்ற சம்பவங்கள் அவர் மூலம் எனக்கு நிறையவே நடைபெற்றன.
கேமரா முன் நடிக்கும் நடிகர்களை அழகாக காமிப்பதற்கு எங்களது முழு உழைப்பை நாங்கள் தருகிறோம், திரைத்துறையில் நாங்களும் முக்கிய பங்கை வகிக்கிறோம் ஆனால் ஒப்பனை கலைஞர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
வட இந்தியாவில் தபு போன்ற ஸ்டார் நடிகைகளுடன் கூட சேர்ந்து பணியாற்றினோம். எங்களைப் போன்றவர்களுக்காக தபு வேனையெல்லாம் அவரே புக் செய்து எங்களை நன்றாக பார்த்துக்கொள்வார்'' என்றார்.
அமலா பாலுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் வீட்டுக்கும் வரும் போட்டாவை இன்ஸ்டாவில் பகிர்ந்தார். மகனுக்கு இலாய் என்ற பெயரை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூலை அள்ளியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.