`வில்லி' கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை-அனுபமா பரமேஸ்வரன்
- ஒரு படத்திலாவது எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை.
- அனுபமா பரமேஸ்வரனுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அனுபமா பரமேஸ்ரன். தொடர்ந்து தனுசுடன் கொடி, அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே, ஜெயம் ரவி ஜோடியாக சைரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வாய்ப்புகள் சரிவர இல்லாததால் தெலுங்கு மொழியில் பல புதிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு திரை உலகில் அனுபமா பரமேஸ்வரனுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது.
இந்தநிலையில் அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வில்லியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பது என்னுடைய கனவு. ஒரு படத்திலாவது எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
சில நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரங்களை பார்க்கும் போது நமக்கு ஏன் இது போன்ற கதாபாத்திரங்கள் அமைவதில்லை என ஏங்குவேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் நடிக்க நம்பிக்கையுடன் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.