கேன்ஸ் பாம் டி'ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படம்
- பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம்,
- இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில் கேன்ஸ் பாம் டி'ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் போர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.
இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாரூன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் கிராஷ் கோர்ஸிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்தின் டிரெய்லர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுகளைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறது. படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.
இரு செவிலியர்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு டிரிப் செல்கின்றனர். அதில் அவர்கள் பார்க்கக் கூடிய மனிதர்கள், வாழ்க்கை என படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ஷாஜி கருண் இயக்கிய மலையாள படமான ஸ்வஹம் திரைப்படம் தான் இந்தியாவிலேயே இதற்கு முன் இப்பிரிவில் போட்டியிட்டப் படம். அதற்கு அடுத்து "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.