இனிமே நாமளும் மம்மூட்டி வீட்டுல தங்கலாம்... எப்படி தெரியுமா?
- மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மம்மூட்டி.
- அவரது வீடு விருந்தினர்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.
மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மம்மூட்டி. மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகரான மம்மூட்டி கேரள மாநிலம் பனம்பில்லி நகரில் உள்ள வீட்டில் கடந்த 2008 முதல் 2020 வரை குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பின்னர் அம்பேலி பாதம் சாலையில் உள்ள வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் பனம்பில்லி நகரில் உள்ள வீட்டிற்கு 'மம்மூட்டி ஹவுஸ்' என பெயரிடப்பட்டு, அவரது வீடு விருந்தினர்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.
4 படுக்கை அறைகள். ஒரு ஹோம் தியேட்டர் வசதி கொண்ட இந்த வீட்டில் தங்குவதற்கு 1 நாளைக்கு ரூ.75 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது.
மம்மூட்டி தற்பொழுது பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.