சினிமா செய்திகள்
நிதின் - ஸ்ரீலீலா நடித்த Robinhood டிரெய்லர் ரிலீஸ்
- தெலுங்கில் ராபின்ஹுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்துள்ளனர்.
- இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் ராபின்ஹுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் இந்த இப்படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக படக்குழு அண்மையில் போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக .
அதன்படி டேவிட் வார்னர் நடித்துள்ள திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாகவும் கலர்ஃபுல்லாகவும் அமைந்துள்ளது. படத்தை குறித்து ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.