சல்மான் கான் நடித்த சிக்கந்தர் டிரெய்லர் ரிலீஸ்
- ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
- திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.
மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான ஸோரா ஜபீன் வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களால் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகளில் பல சல்மான் கானின் பன்ச் வசங்கள் இடம் பெற்றுள்ளது. குடும்பங்கள், ரசிகர்கர்கள், காதலர்கள்,என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக மாஸ் கமெர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.