ரகுவரனின் ஆவண திரைப்படம் - Raghuvaran: A Star That Defied Time டீசர் ரிலீஸ்
- இவர் 200 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்
- ரகுவரனின் வாழ்கையை ஆவண திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் என்றும் சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் நடிகரான ரகுவரனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நடிகர் ரகுவரன் 1958-ல் கேரளாவில் பிறந்தார். இவர் 200 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் கே ஹரிஹரன் இயக்கத்தில் ஏழாவது மனிதன் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
அதே ஆண்டு காக்க என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மற்றும் இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
இவரது நடிப்பில் வெளியான சம்சாரம் அது மின்சாரம், , மைக்கேல் ராஜ், அஞ்சலி, பாஷா , அமர்கலம் ஆகிய திரைப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் மைல்கற்கல் என சொல்லலாம்.
அவர் இறப்பதற்கு முன் யாரடி நீ மோகினி [2008], எல்லாம் அவன் செயல் [2008], அடடா என்ன அழகு மற்றும் உள்ளம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவர் 2008 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி காலமானார்.
இந்நிலையில் ரகுவரனின் வாழ்கையை ஆவண திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் ஹாசிஃப் அபிடா ஹகீம் இவரே இப்படத்தின் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு Raghuvaran: A Star That Defied Time என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றூம் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படம் தமிழ் , மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.