சினிமா செய்திகள்
null

'இந்தியன் 2' முதல் நாள் வசூல் எவ்வளவு ?

Published On 2024-07-13 10:34 IST   |   Update On 2024-07-13 11:10:00 IST
  • தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது.
  • ரசிகர்கள் மத்தியில் ஒரு கவலையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியன் 2 பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

இப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியன் 2 படத்தை வெளியிட தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது. உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் நேற்று இந்தியன் 2 வெளியானது. படம் வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.

இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் ஒரு கவலையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம், இந்தியா முழுவதும் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. தமிழில் ரூ.17 கோடியும், தெலுங்கில் ரூ.7.9 கோடியும், இந்தியில் 1.1 கோடியும் வசூலித்துள்ளது.

முன்னதாக, கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' ரூ.32 கோடியும், சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 ஏடி' ரூ. 95 கோடியும் முதல் நாளில் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News