மீண்டும் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா - வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு
- இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
- இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.
அண்மையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. .
இந்நிலையில், 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஆனால் இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை. இப்படத்தை ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக வேறொரு இயக்குநர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் திரிஷாவை வைத்து மாசாணியம்மன் என்ற படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.