சினிமா செய்திகள்

அமரன் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

Published On 2024-08-14 17:02 IST   |   Update On 2024-08-14 17:02:00 IST
  • அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
  • இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகிறது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமரன் படத்தின் மேக்கிங் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "போர்கள், போராட்டங்கள், தியாகங்களை நினைவு கூர்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் எந்த அளவிற்கு உழைத்துள்ளார் என்பதை இந்த மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது.

இந்த வீடியோவில், "போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான். நம்மில் யார் இறந்தாலும், ஒரு தாய் அழுவாள் பாரடா..." என்ற பாடலும் ஒலிக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News