
வரும் பொங்கலுக்கு விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்?
- எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'.
- திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் அடுத்தாண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் திரைப்படம் இரண்டுமே ஒரே நாளில் வருவதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
விஜய் கடைசியாக நடித்த தி கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்தில் நடித்து இருப்பார் அதில் துப்பாக்கியை புடிங்க சிவா என விஜய் வசனம் பேசுவார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுப்பொருளாக அமைந்தது. அதை தொடர்ந்து தற்பொழுது ஒரே நாளில் வெளியாகும் இருவரின் திரைப்படமும் ஒருவித இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.