null
சூரி நடித்த கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் அப்டேட்
- படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
- சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. திரைப்படத்தில் இவர்கள் நடித்த கதாப்பாத்திரமான பாண்டி மற்றும் மீனா பற்றிய பதிவுகளை சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கலீடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கொட்டுக்காளி திரைப்படம் சூரி நடிப்பில் வெளிவந்த விடுதலை மற்றும் கருடன் திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என சூரி கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.