`சூரரைப்போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை பார்த்த சூர்யா மற்றும் ஜோதிகா
- சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'.
- சர்ஃபிரா படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று மும்பையில் நடைப்பெற்றது
சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது. சூர்யாவிற்கு மிகப்பெரிய திரைப்படமாக இப்படம் அமைந்தது.
இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.
தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்தார். இந்தியில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தியில் சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில். தற்பொழுது திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று மும்பையில் நடைப்பெற்றது இதில் சர்ஃபிரா படக்குழுவினரும், நடிகர் சூர்யா, ஜோதிகா, ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா பங்கேற்றனர்.
அப்பொழுது அக்ஷய் குமாருடன் இணைந்து சூர்யா மற்றும் ஜோதிகா புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.