சினிமா செய்திகள்

தனுஷ்

புது வீட்டில் குடியேறிய நடிகர் தனுஷ்

Published On 2023-02-20 19:00 IST   |   Update On 2023-02-20 19:00:00 IST
  • நடிகர் தனுஷ் போயஸ்கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளார்.
  • இங்கு தனது தாய் விஜயலட்சுமி, தந்தை கஸ்தூரி ராஜாவுடன் குடியேறியுள்ளார்.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி உலக அளவில் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சென்னை போயஸ்கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டில் தனது தாய் விஜயலட்சுமி, தந்தை கஸ்தூரி ராஜாவுடன் குடியேறியுள்ளார்.


சிவராத்திரியை முன்னிட்டு இவரது வீட்டில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் தனுஷின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, "தம்பி தனுஷின் புதிய வீடு… கோவில் உணர்வு எனக்கு.. வாழும் போதே தாய்,தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணர படுகிறார்கள்… மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள்.. இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும், உன்னை பார்த்து ஏங்கட்டும், உன்னை கண்டு வியக்கட்டும், வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News