- இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'குலு குலு'.
- 'குலு குலு' படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா நடித்திருக்கிறார்.
'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு 'குலு குலு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.இப்படம் ஜூலை 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'குலு குலு' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ அனைவரையும் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.