'பொம்மை நாயகி' படத்தின் புதிய அப்டேட்
- இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் பொம்மை நாயகி.
- இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொம்மை நாயகி
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'பொம்மை நாயகி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
பொம்மை நாயகி போஸ்டர்
'பொம்மை நாயகி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The gentle, breezy 2nd single from #BommaiNayagi is all set to fill you with love and music ♥️?
— Yaazhi Films (@YaazhiFilms_) January 18, 2023
Releasing this Friday, 20th January ✨
A @SundaramurthyKS Musical#BommaiNayagiFromFeb3 @beemji @iYogiBabu @officialneelam @YaazhiFilms_ @Manojjahson @shan_shanrise @ZeeTamil pic.twitter.com/ghEyepPfKm