சினிமா செய்திகள்
null
நானி படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்
- நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஹாய் நான்னா'.
- இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இதைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணாடி கண்ணாடி' பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த பாடலின் தமிழ் வெர்ஷனை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.