சினிமா செய்திகள்
ரஜினியின் அடுத்த படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் அமோக வெற்றி பெற்றது.
- ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார்.
ரஜினிகாந்த நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தலைவர் 170 என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டு இருக்கிறது. தலைவர் 170 படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.
இந்த படத்தின் மற்ற நடிகர்கள் விவரம் நாளை முதல் அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.