null
தமிழ் ஹீரோ என்னை துன்புறுத்தினார்- நித்யா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு
- சினிமா துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.
- இவர் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவர் நடித்த தேன் மொழி கதாப்பாத்திரம் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "தெலுங்கு திரையுலகில் நான் எந்த விதமான பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். தமிழ் ஹீரோ ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்" என்று பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.