சினிமா செய்திகள்
null

தொழில்நுட்பத்தை பார்த்தால் பயமாக உள்ளது- ராஷ்மிகா வேதனை

Published On 2023-11-06 16:45 IST   |   Update On 2023-11-07 10:38:00 IST
  • நடிகை ராஷ்மிகா பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
  • இவர் 'புஷ்பா -2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதையடுத்து புஷ்பா- 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.



சமீபத்தில் 'டீப் ஃபேக்' (deepfake) மூலம் நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி, அதனை சிலர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தப்பட்ட ராஷ்மிகா முகம்

இந்நிலையில், இது குறித்து நடிகை ராஷ்மிகா இணையத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதாவது, "deepfake வீடியோ குறித்து பேசுவது மன வருத்தமாக உள்ளது. தொழில் நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது பயமாக இருக்கிறது. ஒரு பெண்ணாகவும் நடிகையாகவும் எனக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கும் எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.


ராஷ்மிகா பதிவு

இது என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் எப்படி சமாளித்திருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை . இதனால் பலர் பாதிக்கப்படுவதற்கு முன் இது குறித்து தெரியப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு இதுபோன்ற தொழில்நுட்பத்தில் 'காவாலா' பாடலுக்கு சிம்ரன் ஆடுவது, மோடி சினிமா பாடல்கள் பாடுவது போன்ற வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News