சினிமா செய்திகள்

மனவேதனையில் ராஷ்மிகா.. தொடர்ந்து குரல் கொடுக்கும் பிரபலங்கள்

Published On 2023-11-07 14:55 IST   |   Update On 2023-11-07 14:55:00 IST
  • நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
  • இவரின் ஏஐ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதையடுத்து புஷ்பா- 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.


இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளதாவது, "'சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய வலுவான வழக்கு இது' என்று பதிவிட்டிருந்தார்.


அமிதாப் பச்சன் - சின்மயி

மேலும், பாடகி சின்மயி, 'ராஷ்மிகாவின் டீப் பேக் (deepfake) வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவர் மனவேதனையுடன் வலைதளத்தில் பதிவிட்டதை நான் பார்த்தேன். தினமும் பெண்களின் உடல்கள் சுரண்டப்படும் ஒரு நாட்டில், பெண்களை குறிவைத்து துன்புறுத்தவும் மிரட்டி பணம் பறிக்கவும் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் டீப் பேக். சிறுமிகளுக்கு டீப் பேக்கின் ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தவும், இதுபோன்ற சம்பவங்களுக்கு புகாரளிக்கவும் நாடு தழுவிய ஒரு விழிப்புணர்வு பிரசாரம் தேவைப்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News