சினிமா செய்திகள்
null

நான் கஷ்டப்பட்டு தயாரித்த படத்திற்கு லஞ்சம் கொடுத்தேன்- மனம் திறந்த சமுத்திரகனி

Published On 2023-09-30 12:17 IST   |   Update On 2023-09-30 13:01:00 IST
  • இயக்குனர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவராக இருப்பவர் சமுத்திரகனி.
  • இவர் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இயக்குனர் சமுத்திரகனி பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகன், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார். இவர் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.


இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் சமுத்திரகனி 'அப்பா' படத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, செல்போன் வைத்திருப்பவர்கள் படத்தை விமர்சனம் செய்யலாம் என்று ஆகிவிட்டது. நல்ல படங்கள் ஓடும். யார் விமர்சனம் செய்தாலும் அதன் தரம் குறையாது, விமர்சனம் செய்வது என்பது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். நல்ல விஷயத்தை கூறினால் மக்கள் அதை வரவேற்பார்கள்.


என்னுடைய 'அப்பா' திரைப்படத்திற்கு நான் லஞ்சம் கொடுத்தேன். அது மிகவும் வருத்தமான விஷயமாக இருந்தது. 'அப்பா' திரைப்படத்தை அரசு தான் எடுத்திருக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையில் நான் கஷ்டப்பட்டு, நானே தயாரித்த திரைப்படத்திற்கு வரி விலக்கு சான்றிதழ் வாங்கும் போது பணம் கொடுத்து தான் வாங்கினேன் என்று பேசினார்.

Tags:    

Similar News