சினிமா செய்திகள்

வெளியீட்டை ஒத்திவைத்த ஷங்கர்.. பதறிய ரசிகர்கள்

Published On 2023-11-11 12:59 IST   |   Update On 2023-11-11 12:59:00 IST
  • இயக்குனர் ஷங்கர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
  • இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


கேம் சேஞ்சர் அறிக்கை

இந்நிலையில், இந்த பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பாடல் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாடலுக்காக ஆர்வமாக காத்திருந்த ரசிகர்கள் இந்த அறிவிப்பால் சற்று ஏமாந்துவிட்டனர்.


Tags:    

Similar News