லட்சக்கணக்கானவர்களை ஊக்குவிக்கும் உங்கள் சேவை தொடரட்டும்- ஷங்கர் பதிவு
- நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.
1960-ஆம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது என பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ஷங்கர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! 'சேனாபதியை'மீண்டும் திரையில் கொண்டு வர உங்களோடு இணைந்தது மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். நீங்கள் தொடர்ந்து எங்களை மகிழ்விப்பீர்கள், மேலும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.
Wishing our Ulaganayagan @ikamalhaasan sir a very happy birthday! It is wonderful to have had the chance to work with you again to bring Senapathy back! Hope you keep entertaining us and continue to inspire millions more! #indian2 pic.twitter.com/tGpA6In56I
— Shankar Shanmugham (@shankarshanmugh) November 7, 2023