சினிமா செய்திகள்
null
நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
- இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் வஹீதா ரஹ்மான்.
- இவர் கடைசியாக தமிழில் 'விஸ்வரூபம் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவர் வஹீதா ரஹ்மான். செங்கல்பட்டில் பிறந்த இவர் பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் நடித்துள்ள வஹீதா ரஹ்மான் கடைசியாக தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'விஸ்வரூபம் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற உயரிய விருதுகளையும் வென்றுள்ளார்.
இந்நிலையில், நடிகை வஹீதா ரஹ்மானுக்கு 'தாதா சாகேப் பால்கே' வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.