தி கோட் படத்தில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்தது ஏன்? - புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
- தி கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் காரில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது.
- கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க புஸ்ஸி ஆனந்த் வந்தார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் காரில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. 2026 இல் விஜய் தமிழக முதலமைச்சர் ஆவார் என்பதை குறிக்கும் விதமாக இந்த நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய புஸ்ஸி ஆனந்திடம் 'தி கோட்' படத்தில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அதைநோக்கி தானே எங்களது கட்சி பயணம் உள்ளது" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.