சினிமா செய்திகள்

'வருஷமெல்லாம் வசந்தம்' பட இயக்குனர் ரவி சங்கர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2024-07-13 14:39 IST   |   Update On 2024-07-13 14:39:00 IST
  • 'சூரியவம்சம்' படத்தில் இடம்பெற்ற கிளாசிக் பாடலான 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' பாடலை எழுதியவரும் ரவி சங்கரே ஆவார்.
  • சென்னை கே.கே.நகர் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் 63 வயதான ரவி சங்கர் வசித்து வந்தார்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் மற்றும் காதலர் தின நாயகன் குணால் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவி சங்கர் இயக்கிய முதலும் கடைசியுமான படம் வருஷமெல்லாம் வசந்தம்.

அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் பாடலாசிரியர் அவரே. அதுமட்டுமின்றி விக்ரமன் இயக்கிய  'சூரியவம்சம்' படத்தில் இடம்பெற்ற கிளாசிக் பாடலான 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' பாடலை எழுதியவரும் ரவி சங்கரே ஆவார். வருஷமெல்லாம் வசந்தம் படத்துக்கு பிறகு படம் எதுவும் இயக்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் சென்னை கே.கே.நகர் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் 63 வயதான ரவி சங்கர் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று [ஜூலை 12] இரவு தனது அறையில் ரவி சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமை மற்றும் பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

Tags:    

Similar News