சினிமா

அதுக்கு சரிப்பட்டு வராததால் நடிகையை கலட்டிவிட்ட இயக்குநர்

Published On 2017-08-19 18:07 IST   |   Update On 2017-08-19 18:07:00 IST
அதுக்கு சரிப்பட்டு வராததால் நடிகை ஒருவரை தனது படத்தில் இருந்து இயக்குநர் ஒருவர் நீக்கிவிட்டாராம்.
கலகலப்பான படங்களை இயக்குவதில் பிரபலமான அந்த இயக்குநர் தற்போது, பிரமாண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அந்த படத்தில் டிக் நடிகரும், பாஸ் நடிகரும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். மேலும் படத்திற்காக தங்களை தயார்படுத்தியும் வருகின்றனர்.

அதேநேரத்தில் அந்த படத்தில் ராணியாக நடிக்கவிருந்த புலி நடிகை சில காரணங்களால் படத்தில் இருந்து விலகியதால், அவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது.

அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகையை தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டோ ஷீட்டில் இயக்குநருக்கு பிடித்தமான நடிகையான பப்ளிமாஸ் நடிகையும் பங்கேற்றார். விதவிதமாக அவரை போட்டோ எடுத்து பார்த்தும் நடிகை தேறாததால், அதுக்கு அந்த நடிகை சரிப்பட்டு வரமாட்டார் என இயக்குநர் நடிகையை கலட்டிவிட்டாராம்.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் நாயகிக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Similar News