சினிமா

ஜோக்கர்

Published On 2016-04-06 19:50 IST   |   Update On 2016-04-06 19:51:00 IST
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘ஜோக்கர்’. இந்த படத்தின் கதாநாயகன் சோமசுந்தரம். இவர் ‘ஆரண்ய காண்டம்‘. ஜிகர்தண்டா படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘ஜோக்கர்’. இந்த படத்தின் கதாநாயகன் சோமசுந்தரம். இவர் ‘ஆரண்ய காண்டம்‘. ஜிகர்தண்டா படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர். கதாநாயகிகளாக புதுமுகங்கள் காயத்ரி, ரம்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மு.ராமசாமி, எழுத்தாளர்கள் பாவா செல்லத்துரை சா.பாலமுருகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு- செழியன், இசை-சான் ரோல்டன், பாடல்கள்-யுகபாரதி, படத்தொகுப்பு-சண்முகம் வேலுசாமி. தயாரிப்பு-எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு. இயக்கம்-குக்கூ ராஜுமுருகன். படம் பற்றி அவர் கூறுகிறார்...

உலக மயமாக்கல், நவீன இந்தியா என்று கூறி மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைத்து விட்டது போன்ற மாயையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதை பேசும் படம் இது. தருமபுரிதான் கதை களம். இந்த பகுதி மக்களையும் நடிக்க வைத்திருக்கிறோம். கிராமத்தில் இருக்கிற மன்னாதி மன்னன் தான் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதி தன்னை கண்டுகொள்வதில்லையே என்று கோபப்படுகிறார். இதற்காக அரசியல்வாதியை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது பற்றி அவன் கண்டுபிடிக்கும் வழிமுறைதான் கதை.

இதில் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது. இது சமூக நோக்கமும், அக்கறையும் கொண்ட படம். நாம் ஜோக்கர்களாக பார்ப்பவர்கள் எல்லாம் உண்மையில் ஜோக்கர்கள் அல்ல. அப்படியானால் உண்மையான ஜோக்கர்கள் யார்? என்பதற்கான விடைதான் இந்த கதை.

Similar News