சினிமா

கொடுங்கையூர் குழந்தைகள் உயிரிழப்புக்கு அனுதாபமும் நிதியுதவியும் போதாது - கமல்ஹாசன்

Published On 2017-11-01 16:20 IST   |   Update On 2017-11-01 16:25:00 IST
கொடுங்கையூர் பகுதியில் நேற்று மழை தண்ணீரில் அறுந்து விழுந்த கம்பியால் உயிரிழந்த இரு சிறுமிகள் உயிரிழப்புக்கு அனுதாபமும் நிதியுதவியும் போதாது, ஆவண செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் இன்று குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன.

மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு சிறுமிகள் அந்த கம்பியை தெரியாமல் மிதித்ததில், மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிகள் மகா (9) மற்றும் பாவனா (8) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது,

`கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவணவெல்லாம் செய்ய வேண்டும்'

இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.


Similar News