கிரிக்கெட் (Cricket)
null

பாண்ட்யாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன்? அகர்கர் விளக்கம்

Published On 2024-07-22 10:00 GMT   |   Update On 2024-07-22 10:03 GMT
  • ஹர்திக் பாண்ட்யா விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.
  • காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். We want someone who can play a lot without injury.

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

டி20-யில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா முழுமையான பிட்னஸ் கொண்டிருக்கவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதனாலயே சூர்யகுமாரை புதிய கேப்டனாக நியமித்ததாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

ஹர்திக் பாண்ட்யா இப்போதும் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். இருப்பினும் பிட்னஸ் என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அது அவரை தேர்வு செய்ய பயிற்சியாளர் அல்லது தேர்வுக்குழுவுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அவரது விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.

ஏனெனில் நாங்கள் அடிக்கடி காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். அந்த வகையில் சூர்யகுமார் கேப்டனாக செயல்படுவதற்கு தேவையான தகுதிகளைக் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

அதே சமயம் ஹர்திக் பாண்ட்யாவை நாங்கள் சிறப்பாக கையாள்வோம் என்று கருதுகிறோம். டி20 உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். கேப்டன்ஷிப் பற்றி ஹர்திக் பாண்ட்யாவிடமும் நாங்கள் பேசியுள்ளோம்.

சூர்யகுமார் யாதவ் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர். நீங்கள் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடக்கூடிய ஒரு கேப்டனை விரும்புவது முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.

இவ்வாறு அஜித் அகார்கர் கூறினார்.

Tags:    

Similar News