கிரிக்கெட் (Cricket)

விராட் கோலிக்கு அன்பு கோரிக்கை வைத்த பாக். முன்னாள் வீரர் யூனிஸ் கான்

Published On 2024-07-25 17:04 IST   |   Update On 2024-07-25 17:04:00 IST
  • சாம்பியன் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
  • இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. பொதுவான இடத்திற்கு போட்டியை மாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்தியா கடைசியாக 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் சென்றது. அதன்பிறகு, இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றனர்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக கோலி பாகிஸ்தானுக்கு வர வேண்டும். அது எங்களின் விருப்பமும் கூட. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது மட்டுமே விராட்டின் வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

என்று யூனிஸ்கான் கூறினார். 

Tags:    

Similar News