கிரிக்கெட் (Cricket)

பாக். அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் வேண்டும்- அடம் பிடிக்கும் கம்பீர்

Published On 2024-07-12 13:26 GMT   |   Update On 2024-07-12 13:26 GMT
  • இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
  • பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான், எல் பாலாஜி ஆகியோரை பிசிசிஐ பரீசிலனை செய்து வந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது உதவியாளர்களாக பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை.

ஆனால் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரும் பீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டோஸ்கேட் ஆகியோரை நியமிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு கம்பீர் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியது.

மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான், எல் பாலாஜி ஆகியோரை பிசிசிஐ பரீசிலனை செய்து வந்தனர். ஆனால் கம்பீர் வினய் குமாரை நியமிக்க கோரிக்கை வைத்ததாக தெரிய வந்தது.

இப்படி பிசிசிஐ ஒரு முடிவு செய்ய புதிய பயிற்சியாளர் கம்பீர் ஒரு முடிவு செய்து வருவதாக தகவல் வெளியாகி வருவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த குழப்பத்திற்கு மத்தியில் மீண்டும் ஒரு குழப்பம் அரங்கேறி உள்ளது. பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரரான மோர்னே மோர்கல் நியமிக்க கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பிசிசிஐ-யிடம் இருந்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இவர் பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து அதன்பின் அதிலிருந்து விலகினார்.

மேலும் ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த போது அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் மோர்னே மோர்கல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News