கம்பீர் நியமனம்: ஓரம்கட்டப்படும் கோலி.. ஹர்திக் பாண்ட்யாவிடம் ஆலோசனை கேட்ட பிசிசிஐ
- இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார்.
- இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்கவுள்ளார்.
இதன்மூலம் இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு விராட் கோலியிடம் பிசிசிஐ கலந்தோலோசிக்கவில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித், கோலி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இனிமேல் டி20 போட்டிகளுக்கு பாண்ட்யா தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தலைமை பயிற்சியாளராக கம்பீரை நியமனம் செய்வதற்கு முன்பு ஹர்திக் பாண்டியாவிடம் பிசிசிஐ கலந்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்பீருக்கும் கோலிக்கும் இடையே கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருவரும் கட்டிப்பிடித்து பிரச்சனையை முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.