கிரிக்கெட் (Cricket)
மகளிர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி கைவிடப்பட்டது
- தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்தது.
- இந்தியா சார்பில் தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ராகர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவில் சுற்றுப் பணம் மேற்கொண்டுள்ள மகளிர் தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், நேற்றிரவு 2வது டி20 போட்டி நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்தது. அந்த அணியின் தஸ்மின் பிரிட்ஸ் மற்றும் ஆன்னி போஸ்ச் முறையே 52 மற்றும் 40 ரன்களை எடுத்தனர்.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ராகர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் முதல் பாதி முடிந்த நிலையில், மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.